கலாசார அலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து ஓட்டமாவடி பிரதேச செயலகம் நடாத்தும் பிரதேச கலை இலக்கிய விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமை நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம். அல்அமீன், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ஹமீட், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்;, பிரதேச கலைஞர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலக கலாசார பேரவையின் மருதோன்றி சஞ்சிகையின் முதல் பிரதி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவினால் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதனுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கும் சஞ்சிகை பிரதி வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், பிரதேச செயலக கலாசார பேரவையினால் பாடசாலை மட்டத்திலும் திறந்த போட்டியாகவும் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதேச கலைஞர்களதும் பாடசாலை மாணவர்களதும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
இவ் விழாவில் வரவேற்புரையை கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நளீம் நடாத்தியதுடன் நூலின் அறிமுகமும் விமர்சன உரையையும் அதிபர் எச்.எம்.எம்.இஸ்மாயில் நடாத்தியதுடுன் நன்றி உரையினை கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.திலீபா நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment