சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கமைய 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் நாடலாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்றது.
இந்த வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள ஓட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகளுக்கு “பைசர்” தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரப்பித்து வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலையை சேர்ந்த 650 மாணவிகளுக்கு இன்றைய தினம் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன்.
ஓட்டமாவடி சுகாதார வைத்தய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பல் வைத்திய நிபுணர் திருமதி ஏ.எல். ஹஸீனா, பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment