"ஆளுமைப் பெண்கள்" போட்டியில் மாகாண மட்டத்தில் இறக்காமத்திற்கு இரண்டு விருதுகள் !



நூருல் ஹுதா உமர்-
நாட்டிலுள்ள பெண் திறமையாளர்களை இனம்கண்டு அவர்களை கௌரவப்படுத்தும் தேசிய ரீதியான தளமான இலங்கை வனிதாபிமானவின் இரண்டாம் கட்டம் - 2021 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சகல துறைகளிலும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் பெண்களை ஒவ்வொரு மாகாணமாக இனம் கண்டு தேசிய ரீதியான போட்டிக்கு அவர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.

தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் News 1st இணைந்து நடத்திய ஸ்ரீலங்கா வனிதாபிமான 2021 போட்டி நிகழ்ச்சியில் இறக்காமம் பிரதேசம் சார்பாக கலந்து கொண்ட இருவர் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இறக்காமம் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் கணக்குப் (பிரிவு) கவிதாயினி பர்சானா றியாஸ் கலைத் துறையில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டி உள்ளதோடு தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹிஜ்றா மகளீர் சங்க தலைவியும் பெண் செயற்பாட்டாளருமான எஸ்.டி நஜீமியா தொழில் முனைவோர் மற்றும் முயற்சியாண்மைத் துறையில் மாகாண மட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். மனித வளங்கள், நிதி மேலாண்மை, விற்பனை மற்றும் ஊக்குவிப்பு, சுற்றுலா, கலை, விளையாட்டு, அரசு துறை, தொழில் முனைவோர் மற்றும் முயற்சியாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்களிப்பு செய்யும் தொழில்முறை தகுதிகளைக் கொண்ட பெண்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :