இளைஞர் சேவை மன்றத்தினால் பிரித்தானிய எடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் நிகழ்வு 26.01.2022 கொழும்பு 7 ல் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு இளைஞா் சேவை மன்றத்தின் தலைவா் தமித்த விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இளைஞா் விளையாட்டுத்துறை அமைச்சா் நாமல் ராஜபக்ச பிரதம அதிதிாயகக் கலந்து கொண்டு தங்கப் பதங்களைப் பெற்ற இளைஞா்கள் யுவதிகளுக்கு விருதுகளை பகிா்ந்தளித்தாா்.
இப் போட்டி நிகழ்ச்சிக்கு நாடலாரீதியில் 40 ஆயிரம் இளைஞா்கள் கலந்து கொண்டனா். இவா்கள் 13-24 வயதுடைய இளைஞா் யுவதிகளைக் கொண்ட கழகங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுடப்க் கல்லுாாிகள் பாடசாலை மாணவா்களும் அடங்குகின்றனா். இம் மாணவா்களது திறமைகள் ஆற்றல்கள் , கண்டுபிடிப்புக்கள், சாதனைகள், விளையாட்டு சாதனைகள் கலை ,.கலாச்சார நிகழ்வுகளில் திறமையைக் வெளிக்கெணா்ந்து போட்டியில் வெற்றிபெற்ற 150 இளைஞா் யுவதிகள் தெரிபு செய்யப்பட்டு தங்கப் பதக்கம், வெள்ளிப்பதக்கம், சில்வா் விருதுகள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.
இப் போட்டி நிகழ்ச்சி வருடா வருடம் ”பிரித்தானிய எடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல்” உலகலாரீதியிலும் 8 மில்லியன் இளைஞா்கள் கலந்து கொண்டுள்ளாா்கள். இலங்கையில் 40 ஆயிரம் இளைஞா் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து ஜீனியஸ் 7 விருதுப்பிரிவுடாக மூன்று பேர் வெண்கல விருதுக்கு சாய்ந்தமருதுாரைச் சேர்ந்த பஸ்கரத் சிஹாப், அப்தாஸ் அகமட், மற்றும் ஹனிபா அகமட் ஆகியோா்களும் பெற்றுக் கொண்டனா். அத்துடன் ஸ்ரீலங்கா இளைஞா் அலியன்ஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஜூனியஸ் 7 விருதுப் பிரிவின் தலைவருமான இசட் எம். ஸாஜித் அவா்களின் வழிகாட்டலின் மேற்படி இளைஞா்கள் வெள்ளி விருதுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment