இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் ஒருங்கிணைப்புடன் சேர்விங் கியூமனிட்டி பௌன்டேசன் மூலமாக ஏற்பாடு செய்த 90 மணித்தியாலய சிங்கள மற்றும் தமிழ் பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கே இச் சான்றிதழ் திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் (22) இடம் பெற்றது.
"நல்லிணக்கத்திற்கான மொழி" எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற இப்பாடநெறியானது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாம் மொழி சிங்களத்தை மேம்படுத்தும் நோக்கிலும் அரச ஊழியர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,சர்வமத தலைவர்கள் ஆகியோர்களுக்காக நடாத்தப்பட்ட இப்பாடநெறியானது திருகோணமலை,அக்குறனை,பேருவளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்காக தமிழ் சிங்கள ஆகிய மொழியில் நடாத்தப்பட்டது. இப்பாடநெறிகளை முழுமையாக பூர்த்தி செய்த 53 நபர்களுக்கு இதன் போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை நகர சபை முன்றலில் இருந்து பிரதான வீதி ஊடாக சமாதான நடை பவணியும் இடம் பெற்றது.
சிங்களம் தமிழ் போன்ற மொழிகள் அரச கரும மொழிகளாக காணப்படுகிறது இவ்வாறான மொழிகளை ஒருவருக்கொருவர் சிங்கள தமிழ் சகோதரர்கள் கற்றிருப்பது அவசியமாக கருதப்படுவதுடன் அரச சேவைக்கு இவ்வாறான மொழிகளை கற்றிருப்பதும் சேவைகள் வழங்குவதில் சிரமங்கள் இன்றி திறம்பட செயற்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கற்கை நெறியானது தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற் திட்டம் ஊடாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
மேலும் குறித்த நிகழ்வுக்கு இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜோ வில்லியம்,நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா,உதவி முகாமையாளர் என்.விஜயகாந்தன் மற்றும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்யப் பிரியா ,சேர்விங் கியூமனிட்டி பௌன்டேசன் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.ஆசிக்,சர்வமத தலைவர்கள், பாடநெறி பங்குபற்றுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment