மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது கோப் ப்றஸ் Coop Fresh விற்பனை நிலையம்



றாவூர் நிருபர் - நாஸர்-அரசாங்கத்தின் சௌபாக்யா தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது கோப் ப்றஸ் Coop Fresh விற்பனை நிலையம் ஏறாவூரில் திறக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கிழ் நாடளாவிய ரீதியில் ஐயாயிரம் நிலையங்களும் கிழக்கு மாகாணத்தில் 16 நிலையங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நிலையங்களும் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச பல நோக்குக்கூட்டுறவுச்சங்கத்தின்கீழ் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு, நீர்ப்பாசன, கால்நடைகள் மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி மாகாண ஆணையாளர் ஏஎல்எம். அஸ்மி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டார்.
ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தலைவர் எம்எல்ஏ. லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி மாவட்ட உதவி ஆணையாளர் கேவி. தங்கவேல், ஏறாவூர் சங்கத்தின் பொது முகாமையாளர் முகம்மது சனூஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.
ஏறாவூர் கூட்டுறவுச்சங்கத்தின்கீழ் வைத்தியசாலை, எரிபொருள் நிரப்பு நிலையம், அரிசிஆலை, வாகன சுத்திகரிப்பு நிலையம், மளிகைப் பொருள்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், கிராமிய வங்கி போன்ற பல்வேறு நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றதை அதிதிகள் இங்கு பாராட்டினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :