ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் YWMA அமைப்பினால் கல்முனையில் வாழ்வாதார உதவிகள் வைப்பு !


எம். என். எம். அப்ராஸ்-
ஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் வை . டப்ளியு . எம். ஏ. (YWMA ) அமைப்பின் பூரண அணுசரணையுடன்,வாழ்வாதார உதவிகள் மற்றும்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத்தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று (06) இடம்பெற்றது .

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக

தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வைக்கப் பட்டதுடன் ,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன இதன் போது வழங்கி வைக்கப்பட்டது மேலும்பல்கலைகழகத்தில் கல்வியை தொடரும் மாணவி ஒருவருக்கு புலமை பரிசில் , கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய விஷேட கல்வி பிரிவுக்கு உதவி தொகை வழங்கி என்பன பாடசாலை அதிபரிடம் குறித்தYWMA அமைப்பினரால் வழங்கி வைக்கப் பட்டது .
மேலும் இதன் போது ரஹ்மத் பவுண்டேசனின் அமைப்பினால் YWMA அமைப்பின் தலைவி

தேசமான்ய பவாசா தாஹா மற்றும் கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசாகாசிம் ஆகியோர் ரஹ்மத் பவுண்டேசனினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன் போது YWMA அமைப்பின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா , உட்பட அமைப்பின் அங்கத்தவர்கள் , கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள்அமைப்பின் தலைவி பைரூசா காசிம் ,கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம் . ஐ. அப்துல் ரஸாக், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான

ஏ. ஆர்.செலஸ்தினா , விமாலாதித்தன் நந்தினி , விநாகமூர்த்தி புவேனேஸ்வரி ,சம்மாந்துறை பிரதேச சபைஉறுப்பினர் எஸ். எம். நிலுபா , ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டகுடும்பங்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :