மருதமுனை எவரடி விளையாட்டுக் கழகத்தின் 05வது வருடாந்த பொதுக்கூட்டம்.



றாசிக் நபாயிஸ்-
ருதமுனை எவரடி விளையாட்டுக் கழகத்தின் 05வது வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் வீரர்கள் கெளரவிப்பும்
கழகத்தின் பொதுச் செயலாளர்
அல்-ஹாஜ் ஏ.கமால்டீனின் அவர்களின் ஒருங்கிணைப்பில்

கழகத்தின் தலைவரும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளருமான எம்.ஐ.எம்.உவைஸ் அவர்களின் தலைமையில் மருதமுனை எம்.சி ரெஸ்ட்யில் (2022/02/12) இரவு 08 மணியளவில் இடம் பெற்றது.

மூன்று கட்டங்களாக நினைவு கூறப்பட் இந்நிகழ்வில் கழகத்தின் ஸ்தாபகர் எம்.எம்.சஹாப்டீன்,
முதல் வீரர் ஏ.பி.இம்தியாஸ் மற்றும் கழகத்தின் முதலாவது தலைவர் ஏ.ஆர்.சமியூன், தென்கிழக்கு, சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவான கழகத்தின் வீரர்கள் இருவர், கழக நிர்வாகிகள், போஷகர்கள், ஆலோசகர்கள் மற்றும்
கனிஷ்ட, சிரேஷ்ட வீரர்கள் என பலர் கிண்ணம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
இதன் போது இந்நிகழ்வுக்கு சிறப்பதியாக கலந்து கொண்ட கழகத்தின் தவிசாளரும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமான ஏ.ஆர்.அமீர் அவர்களால் சிறப்புரையும், கழகத்தின் பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான எஸ்.அஸீம் அவர்களால் விஷேடயுரையும் நிகழ்த்தப்பட்டது.

கலை, கலாசார நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நிர்வாகத் தெரிவு நடைபெற்று தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான
நியமனக்கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் கழகத்தின் போஷகர்கள், ஆலோசகர்கள், ஆதரவாளர்கள், அக்பர் ஜும்மா பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :