கடந்த 2021ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக கிழக்கின் சிறுகதை எழுத்தாளர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 100 சிறுகதைகள்
தொகுக்கப்பட்டு "கிழக்கின் 100 சிறுகதைகள்" தொகுப்பானது வெளியீட்டு வைக்கப்பட்டது.
அது போன்று (2022) இவ்வருடமும் திணைக்களத்தினூடக
கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு நூலின் இரண்டாம் பாகம் வெளியிடப்படவுள்ளது என கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.
இத்தொகுப்பு நூலில் உள்ளடக்கப்படுவதற்கான தரமான சிறுகதை ஆக்கங்கள் கிழக்கு மாகாண எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதுடன் சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்கள் பின்வரும் விதிமுறைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என வேண்டப்படுகிறது.
ஆக்கங்கள் அனைத்தும் கணனியில் 12 எழுத்துரு அளவில் 1-10 பக்கங்களில்
தட்டச்சு செய்யப்படுவதுடன் மென் பிரதிகள் battimc@yahoo.com,
culturalaffairsep@gmail.com பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் வன் பிரதிகள் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்களம், உவர் மலை திருகோணமலை. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். முதலாம் பாகத்தில் இடம் பெற்றவர்களின் சிறுகதைகள் இரண்டாம் பாகத்தில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.
சிறுகதையை அனுப்பி வைக்கும் படைப்பாளி அல்லது ஆசிரியர், அவர் தொடர்பான சுருக்க அறிமுகக் குறிப்பு ஒன்றையும் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஒன்றையும் கட்டாயம் இணைத்து அனுப்புதல் வேண்டும். இவைகள் இணைத்தும் அனுப்பப்படாத சிறுகதைகள் தெரிவுக் குழுவுக்கு அனுப்பபடாமலேயே நிராகரிக்கப்படும். உங்கள் ஆக்கங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருப்பின் அவை தொடர்பான விபரங்களும் சுருக்க குறிப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.
ஆக்கங்களை அனுப்பும் எழுத்தாளர்கள் கிழக்கு மாகாண எல்லை பரப்புக்குள் பிறந்தவராக அல்லது தொடர்ச்சியாக வாழ்பவராக அல்லது கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்தவராகவுமிருக்கலாம். ஆனால் இதற்காக வதிவிட அத்தாட்சியின் நிழற்பிரதி இணைக்கப்பட வேண்டும்.
பிரதிகள் யாவும் 2022.04.30 ஆம் தேதிக்கு முன்னர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் சிறுகதை ஆக்கங்கள் தெரிவுக் குழுவுக்கு அனுப்பபடாமலே நிராகரிக்கப்படும். இது தொடர்பான தகவல்களை பெறுவதற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மாகாண கலாசார உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பான விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
0 comments :
Post a Comment