முன்னாள் பதிவாளர் ஏ.எல்.ஜௌபர் சாதீக் மற்றும் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், ஆகியோருக்கு கௌரவ கலாநிதி பட்டங்கள்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா; எதிர்வரும் 07 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் 2621 பேர் பட்டம் பெறவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (01.02.2022) பல்கலைக்ககழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே உபவேந்தர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த உபவேந்தர்; கூறுகையில், பட்டமளிப்பு விழா இம்முறை தொடராக நான்கு நாட்களுக்கு எட்டு அமர்வுகளாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் முதலாவது அமர்வில் பிரேயோக விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 475 பேரும், இரண்டாம் அமர்வில் கலைப் பீடத்தினைச் சேர்ந்த 219 பேரும், முன்றாம் அமர்வில் கலைப் பீடத்தினைச் சேர்ந்த 348 பேரும், நான்காம் அமர்வில் இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 329 பேரும், ஐந்தாம் அமர்வில் இதே பீடத்தினைச் சேர்ந்த 313 பேரும், ஆறாம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 277 பேரும், ஏழாம் அமர்வில் இதே பீடத்தினைச் சேர்ந்த 348 பேரும், எட்டாம் அமர்வில் கலை, கலாசார பீடம் மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடங்களில் கற்ற 312 வெளிவாரி மாணவர்களும் தமது பட்டங்கபை; பெறவுள்ளதாவும் தெரிவித்தார்.
மேலும், 04 பேர் முது தத்துவமானிப் பட்டங்களையும், 23 பேர் வியாபார நிருவாக முதுமானிப் பட்டங்களையும் 02 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவினையும் பெறவுள்ளதுடன் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், முன்னாள் பதிவாளர் ஏ.எல்.ஜௌபர் சாதீக் ஆகியோர்கள் கௌரவ கலாநிதி பட்டங்களையும் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஊடக மாநாட்டில் பொதுப் பட்டமளிப்பு விழாவின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.ஜௌபர், தமிழ்துறை பேராசிரியரும், பல்கலைக்கழக ஊடக பிரிவின் இணைப்பாளருமான றமீஸ் அப்துல்லா, அரசியல் துறைத்தலைவரும், ஊடகப் பிரிவின் செயலாளருமான பேராசிரியர் எம்.ஏ.எம்.பௌசர், சிரேஸ்ட உதவிப் பதிவாளர் பாரிஸா ஹஸன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment