அல் - ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் கிழக்கு வாசலில் நடைபெற்றது.
சுகாதார வழிமுறைகளை பேணி நடைபெற்ற இம்மாநாட்டில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பேராளர்கள் கலந்துகொண்டதுடன் நடப்பு வருடத்துக்கான உயர்பீட, அரசியல் பீட உறுப்பிர்களையும் தலைவர் அறிவித்ததுடன் பின்வரும் தீர்மானங்களும் பேராளர்களினால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாநாட்டு தீர்மானங்கள்
01. நாட்டின் எல்லா இனங்களும் சமாதானமாகவும் சுபீட்சமாகவும் உரிமைகளோடும் வாழக்கூடியவாறான வகையில், பாலமுனை பிரகடனத்தில் கூறப்பட்டவாறான யாப்பொன்று நமது சுதேசிகளால் உருவாக்கப்படல் வேண்டும்.
02. 2019 ஏப்ரல் 21ல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதனை அரசாங்கம் இந்த நாட்டிற்க்கு வெளிப்படுத்த வேண்டும்.
03. இனங்களுக்கிடையே நெருக்கடிகளை ஏற்படுத்தி அரசியல் செய்யும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்.
04- சுதேச இனங்களுக்கிடையில் குறைந்தபட்சம் விகிதாசார அடிப்படையிலாவது நிலங்கள் பகிரப்பட வேண்டிய சூழ்நிலையிலும், மாறாக, வெளிநாட்டவர்களுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதனை கண்டிக்கின்றோம்.
5- பொழிகின்ற மழைநீரையும் கடலோடு கலக்கின்ற ஆற்று நீரையும் தேக்க வைத்து பயன்படுத்துவதற்க்கான பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும்.
6- படுகடன்களோடும், பொருளாதார நெருக்கடிக்குள்ளும் மாட்டிக்கொண்டிருக்கும் நமது தாய்நாட்டை விடுவிப்பதற்க்காக...
A- நமது வளநிலங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நெற்செய்கை, அது போன்ற தானிய வகைகளுக்கான உற்பத்தியை அதிகரிப்பதற்க்கு விவசாயிகளுடன் இணைந்து முறையான பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும்.
B- ஏனைய நிலங்களில் நமக்கு தேவையான அனைத்தையும் விளைவிப்பதற்க்கு விவசாயிகளுக்கு சுதந்திரமும் அனுசரணையும் வழங்க வேண்டும்.
C - நமது பிரதான உணவுகளில் ஒன்றான பால், நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை நாடு உணர்ந்துள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் 'பால் கிராமங்கள்' உருவாக்கப்படல் வேண்டும்.
D- இவைகளின் மூலம் எதிர்காலத்தில் நமது உற்பத்திகளை வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்வதற்க்கான வழிவகைகளை அதிகரித்தல்.
E - உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலைகளை குறைத்தும் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதுமான வழிகளை ஏற்படுத்தல்.
மேற்சொன்ன விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்க்கு இப்பேராளர் மாநாடு அரசை கோருகின்றது.
0 comments :
Post a Comment