இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி நற்பிட்டிமுனை கிறிக்கட் கழகம் நற்பிட்டிமுனை பொது மைதானத்தில் ஒழுங்கு செய்திருந்த 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் போட்டியில் 19 ஓட்டங்களினால் சாய்ந்தமருது கிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டனர்.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நற்பிட்டிமுனை கிறிக்கட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 18 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குதுடுப்டிபடுத்தாடிய சாய்ந்தமருது கிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 18 ஓவர்களில் 7 விக்கட்டுக்களைஇழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
நற்பிட்டிமுனை கிறிக்கட் அணி சார்பில் முஹம்மட் தில்ஸாத் 25 ஓட்டங்களையும் , பிர்னாஸ்24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் றிலாஸ் 3 ஓவர்களில் 16 ஓட்டங்களைகொடுத்து 4 விக்கட்டுக்களையும் , ஹஸன் 2 ஓவர்களில் 18 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களையும் , ஜவ்ஸான்1 ஓவர் பந்து வீசி 11 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.கையும் பிரதம அதிதியாகவும் , முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment