கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சியடைந்து, இவ்வருடம் நிறைவடையும் போது 1800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி முன்னறிவிப்பு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இது தொடர்பில் தெரிவிக்கையில், சென்ற 2021 ஆம் ஆண்டை விட அதிகளவு சுற்றுலா பயணிகளை இந்த ஆண்டில் எதிர்பார்க்க முடியும்.
2020 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் 682 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் நாட்டுக்கு கிடைத்த போதும், 2021 ஆம் ஆண்டில் அது 260 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்தது.
இதற்கான காரணம் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு மூடப்பட்டிருந்தமை மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
2021 நவம்பரில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 44,294 என்று தெரிவித்த அவர், 2021 டிசம்பரில் 89,506 ஆக இருந்ததாக புள்ளிவிபரங்களை சுட்டிக்காட்டி அவர் தெரிவித்தார்.
ஜனவரி, பெப்ரவரி மாதத்தின் முதல் இரு வாரங்களிலும் அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment