நெடுஞ்சாலை அமைச்சு-
இந்த இரங்கல் பிரேரணையில் வேறு விடயங்களைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. ஆனால் டோச் எடுத்து வந்தது ஒன்றும் பிரச்சினை இல்லை. போலீசார் சுமார் அரை மணி நேரம் வரை எனக்கு தெளிவு படுத்தினார்கள் . அவர்களை பணி நீக்கம் செய்ய தயாராகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவின் பையில் டோச் இருந்ததாகவும், அது அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டது என படைக்கல சேவிதருக்கு அறிவித்து எப்படியோ கொண்டு வந்ததாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைவிட பாரதூரமான பிரச்சினை உள்ளது.
ஹரீன் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் மீண்டும் வெளியே சென்று பார்சல் ஒன்றை எடுத்து வந்துள்ளனர். பார்சலை எடுக்க வேண்டாம் என்று சொல்லியும் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ளார்கள். இதுதான் பிரச்சினை. திரு.கிரியெல்லவுடன் நானும் உடன்படுகிறேன். நாங்களும் இங்கே போராட்டம் நடத்தியிருக்கிறோம். கடதாசிகளை மறைத்து எடுத்து வந்திருக்கிறோம். . இது சாதாரணமானது. அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இந்த பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட வரலாறை நாம் அறிவோம். உணவு பொட்டலங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட சம்பவங்கள் இந்த பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த வரலாற்று விஷயங்களை இழுக்க நான் விரும்பவில்லை. கத்தியுடன் வந்து பிரசன்ன ரணவீரவின் கழுத்தில் வைத்தார்கள். பல விஷயங்கள் நடந்துள்ளன. நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இதுபோன்று பார்சலை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றால் எம்பி களுக்கு எதிராக, என்ன செய்வது என்று அதிகாரிகள் கேட்கிறார்கள். பார்சலை எடுக்க வேண்டாம் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவை அனைத்தும் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகி உள்ளது.
போலீசாரை இடைநிறுத்தம் செய்யாமல் இதுபற்றி கண்டறியுமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் அப்பாவி போலீஸ் அதிகாரிகள். எம்.பி. ஒருவரை எப்படி வலுக்கட்டாயமாக நிறுத்துவது என்று என்னிடம் கேட்கிறார்கள் . அந்த எம்.பி டோர்ச் எடுத்து சென்றது பிரச்சினை அல்ல. இரண்டாவது முறை கட்டாயப்படுத்தி பார்சலை எடுத்துச் சென்றது தான் தவறு. இவற்றினால் பேரழிவு ஏற்படலாம். இங்கு அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் வருகின்றனர். இதை விட அழிவு தரும் பொருட்களை கொண்டு வந்தால் நிலைமை என்னவாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் என்ன நடந்தது என்று கண்டோம். 97 முறை அறிவித்தும் கூட முந்நூறு நானூறு பேர் இறந்து போனார்கள். எனவே இது குறித்து விசாரணை நடத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இதை கண்டுபிடிக்க ஐஜிபியிடம் கோரிக்கை விடுங்கள். கடமைக்கு இடையூறாக செய்ததாக அந்த அதிகாரிகள் கூறுகின்றனர். இனி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நீங்கள் இங்கே போராட்டங்கள் நடத்துங்கள் . நாங்கள் ஒருபோதும் இடையூறு செய்ய மாட்டோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை . ஆனால் இவ்வாறு வலுக்கட்டாயமாக பார்சல் கொண்டு வரப்படுவது தவறு.
அவை சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த அப்பாவி போலீஸ் அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளை பிடித்துக் கொண்டு இவ்வாறு செய்திருந்தால் அது தவறு . அங்கிருந்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய தயாராகிறார்கள். அதனைவிட இந்தத் தவறை செய்தவர்களையும் கடமைக்கு இடையூறு செய்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோருகிறேன். இது போன்று மீண்டும் நடக்காமல், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் யாரையும் கைது செய்யக் கோரவில்லை. இது போன்ற ஒரு பாரதூரமான பிரச்சினை நடந்துள்ளது. அதுகுறித்து இருந்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளீர்கள். கடமைக்கு இடையூறாக இருந்தால், சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். இப்படித்தான் கௌரவ சபாநாயகளே பொரளை தேவாலயத்திற்கு சென்றும் வைத்தியசாலைக்கு சென்றும் பெல்லன்வில பன்சலைக்கு சென்றும் வெடிகுண்டுகளை வைத்தார்கள் . தற்போது அவை அம்பலமாகி வருகிறது.எனவே, இதை அனுமதிக்க வழியில்லை. இது குறித்து நியாயமான விசாரணை நடக்கும் என நம்புகிறோம்.
நாங்கள் யாரையும் கைது செய்யக் கோரவில்லை. இது போன்ற ஒரு பாரதூரமான பிரச்சினை நடந்துள்ளது. அதுகுறித்து இருந்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளீர்கள். கடமைக்கு இடையூறாக இருந்தால், சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். இப்படித்தான் கௌரவ சபாநாயகளே பொரளை தேவாலயத்திற்கு சென்றும் வைத்தியசாலைக்கு சென்றும் பெல்லன்வில பன்சலைக்கு சென்றும் வெடிகுண்டுகளை வைத்தார்கள் . தற்போது அவை அம்பலமாகி வருகிறது.எனவே, இதை அனுமதிக்க வழியில்லை. இது குறித்து நியாயமான விசாரணை நடக்கும் என நம்புகிறோம்.
0 comments :
Post a Comment