அம்பாறை ரஜவெவ வீதி 3.5 கோடி ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை ரஜவெவ வீதி 3.5 கோடி ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1.5 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி பொதுமக்களின் பாவனைக்கு பொருத்தமில்லாதவகையில் காணப்பட்டது.
இப்பிரதேச மக்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனவலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயகாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுகின்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனவலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயகா , அம்பாறை நகராதிபதி கெலும் குமார மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :