ஏறாவூர் நகரசபையின் 47வது மாதாந்த சபை அமர்வு இன்று நகரசபையின் சபா மண்டபத்தில் கௌரவ முதல்வர் MS.நழீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இறைவணக்கத்துடன் ஆரம்பமான கூட்டத் தொடரில் சமூகமளித்த கௌரவ உறுப்பினர்களை வரவேற்று முதல்வர் அவர்களினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக சபையின் வருமானம், மக்களின் வாழ்வாதாரம், தொழிற்துறைகள், கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதோடு அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில் தான் உள்ளன.
தொழிற்சாலைகள் தொடக்கம் அடிமட்டத் தொழிலாளிவரை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி துல்லியமாகப் பிரதிபலிக்கின்றது.
அத்தோடு தற்போதைய மின்சாரத் தடை காரணமாக மாணவர்களின் கற்றல் முற்று முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரவு 6 மணி தொடக்கம் 10 மணி வரையான காலப்பகுதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. இதனால் மாணவர்கள் மீட்டல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் உள்ளது. தற்போதைய மின்சாரத்தடை காரணமாக கா.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி தலைமையுரையினை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1- பிரஜைகள் பட்டயத்தை ( Citizen charter) காட்சிப்படுத்தல் தொடர்பாக ஆராயப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
(எமது சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக காட்சிப்படுத்தல்)
2- 2022ஆம் ஆண்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னொடுப்பதற்கான ஒப்பந்ததாரர்களைத் தெரிவு செய்தல் தொடர்பாக ஆராயப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
3- ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் வீதிகளுக்கு பெயர்ப்பலகை இடுதல் தொடர்பாக ஆராயப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
4- சுத்தப்படுத்த வேண்டிய பாலங்கள், வடிகான்களை சுத்தப்படுத்துதல் தொடர்பாக ஆராய்ந்து நிறைவேற்றப்பட்டது.
5- நடமாடும் வியாபாரிகளின் ஒலிச்சமிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
(நடமாடும் வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடுதல்)
0 comments :
Post a Comment