இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று( 4 ) முல்லைத்தீவு மாவட்டத்தின். ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதே வேளை வளாகத்தினுள் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் , சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்ற பாடசாலை மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment