-எச்.ஏ.அஸீஸ்-
தாயே உன் முதுமை கண்டு
கிலேசம் ஏதும் கொண்டதில்லை
மட்டில்லா மகிழ்ச்சி
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அம்மா!
உன் எழில் வதனம் போன்ற
சுகந்தமிகு சோலையை
சீரிய தண்ணிலவை
எங்குமே கண்டிலேன்
எவராவது கண்டுள்ளீரா?
உன்
வாஞ்சையான கரங்களின் வருடலில்
இளநெஞ்சின் இறுகிய அரவணைப்பில்
மென்பஞ்சு மடியின்
மெதுமையான தாலாட்டில்
வளர்ந்தவன் யான்.
வரவு செலவு பார்க்காத
வனப்புமிக்க சீமாட்டி நீ!
இன்று
உலக அரங்கின் ஒரத்தில் அமர வைத்து யாசகம் செய்ய உன்னை
யார் யாரோ நிர்பந்திக்க...
கயவர்கள் கண்டு கொள்ளா
காத தூரம் எங்கோ உன்னை
கொண்டு செல்ல ஆசை அம்மா
என் கையறு நிலை புரிவாய்...
0 comments :
Post a Comment