சம்மாந்துறை மஜ்லிஷ் அஷ்ஷூறா, ஹிஜ்ரா ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் சம்மாந்துறை ஜம்மியதுல் உலமா சபை ஆகியன இணைந்து நடாத்திய 74 வது சுதந்திர தின நிகழ்வு ஹிஜ்ரா ஜூம்ஆ பள்ளிவாசல் முன்றலில் இன்று காலை (04.02.2022) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மஜ்லிஷ் அஷ்ஷூறா அமீர் கே.எல். ஆதம்பாவா மதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜ்லிஷ் அஷ்ஷூறா தவிசாளரும் ஓய்வு பெற்ற பிரதி வனப் பாதுகாவலருமான எம்.எல். அப்துல் மஜீட், பொதுச் செயலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான முஸ்தபா லெப்பை, செயலாளரும் ஆசிரியருமான எம்.பி.எம். அன்வர், நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மஹ்ரூப் ஆதம், ஜம்மியதுல் உலமா சபைத் தலைவரும் ஆசிரியருமான எம்.வை. அப்துல் ஜலீல் மௌலவி, சம்மாந்துறை பிரதேச செயலக பிரதிநிதியாக பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல். தாசிம் உள்ளிட்ட மஜ்லிஷ் அஷ்ஷூறா, ஹிஜ்ரா ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, சம்மாந்துறை ஜம்மியதுல் உலமா சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள், சம்சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகள், சம்மாந்துறை பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மஜ்லிஷ் அஷ்ஷூறா அமீரினால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதோடு ஹிஜ்ரா ஜூம்ஆ பள்ளிவாசல் பேஸ் இமாம் உஸ்வதுல் ஹஸனா அவர்களினால் நாட்டின் நலன் வேண்டி விஷேட துஆ பிரபர்த்தனையும் இடம்பெற்றது.
மேலும் இலங்கைத் திருநாட்டின் 74வது சுதந்திர தின நினைவாக ஹிஜ்ரா ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டிவைக்கப்பட்டன. அத்தோடு இன்றைய தினம் பள்ளிவாசல் வளாகத்தில் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment