சௌபாக்கிய உற்பத்தி கிராமத்தின் உற்பத்தியாளர்களின் நிலைமைகளை ஆய்வு செய்தல்.



றாசிக் நபாயிஸ்-
முர்த்தி, வதிவிட, பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக சௌபாக்கிய அபிவிருத்தி பணியகமும் கிராம அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து கல்முனை பிரதேச செயலக உளவளத்துணைப் பிரிவின் உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.ஜ.
ஹபீபாவின் ஒருங்கிணைப்பில் சௌபாக்கிய கிராமத்தின் உத்பத்தியாளர்களின் நிலைமைகளை ஆய்வு செய்தல் தொடர்பான செயலமர்வு அம்பாறை மாவட்டச் செயலக உளவளத்துணை இணைப்பாளர் ஏ.ஏ.தீன் முஹம்மதின் தலைமையில் (22) மருதமுனை கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
கல்முனை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சௌபாக்கிய உற்பத்தி கிராமமான மருதமுனை கிராமத்தில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு மத்தியில் அமுல்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயனாளிகளின் நிலைமைகளை ஆய்வு செய்தல் நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றது.

இவ்வாய்வு நடவடிக்கையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும்
13 பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்கள்
பயனாளிகளின் குடியியல் தகவல்கள், அவர்களின் பிரச்சினைகள் கேட்கப்பட்டு தகவல் பெறப்பட்டது.
சேவை நாடியின் வகைகளாக உள சமூக பிரச்சினை, உளக் கோளாறுகள், கல்விப் பிரச்சினைகள், குடும்ப பிரச்சினைகள், அடிமையாகுதல், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், தொற்று நோய்கள், பாலியல் தொடர்பான பிரச்சினைகள், மாற்றுத்திறன் தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :