அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கிழக்குமாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டி.வீரசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (31) திங்கட்கிழமை அம்பாறை பிரதேசசெயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அரச அதிபர் டக்ளசின் வழிநடாத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்கஅமைச்சர் விமலவீரதிசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திலக்ராஜபக்ச, எச்எம்.எம்.ஹரீஸ், ஏ.எல்.எம்.அதாவுல்லா, எஸ்.எம்.எம்.முஷரப் ,பைசால்காசிம் ,த.கலையரசன், ஆகியோருடன் கிழக்குமாகாணசபைத்தலைவர் சந்திரதாச கலப்பதி ஆகியோர் பிரதானிகளாக கலந்துகொண்டனர்.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கேபாக்கியராஜா மாகாண விவசாயஅமைச்சர் திருமதி கே.பத்மராஜா மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்டஉதவிச்செயலாளர் கே.சித்திரவேல் மாகாணஉள்ளுராட்சிஆiணாயளர் என்.மணிவண்ணன் உள்ளிட்ட திணைக்களத்தலைவர்கள் உயரதிகாரிகள் உள்ளுராட்சிமன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment