சிறுபான்மை மக்களும் அவர்களது அரசியல் சூழலும் பற்றிய செயலமர்வு.



றாசிக் நபாயிஸ்-
சிறுபான்மை மக்களும் அவர்களது தற்கால அரசியல் சூழலும்
மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயலமர்வு 2022.02.19 (சனிக்கிழமை)
கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் ஏ.மதன் தலைமையில் இடம் பெற்றது.

சிறுபான்மை மக்களின் அரசியல் பற்றிய அரசியல்சார் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இச்செயலமர்வு ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றதுடன் இரண்டாவது செயலமர்வானது அம்பாறையில் இடம் பெற்றது.

இச்செயலமர்வின் பிரதான வளவாளராக அரசியல் ஆய்வாளர் ஏ.யதிந்திரா கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார். இதன் போது 13வது திருத்தச் சட்டமும் மாகாண சபையும், இலங்கையின் சமாதான முன்னெடுப்பு, சமாதானத்திற்கான மேற்குலக நாடுகளின் தலையீடுகள், இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள், பேரவையின் கட்டமைப்பு, சர்வதேச நீதி பொறிமுறை என்றால் என்ன? அது எந்தளவிற்கு செல்வாக்குமிக்கது, நீதியை உறுதிப்படுத்துவதற்கான உலக ஏற்பாடு, 72 மற்றும் 78ஆம் ஆண்டு அரசியலமைப்பு யாப்பில் சிறுபான்மையினரின் நிலை, பொறுப்பு கூறல் தொடர்பான சர்வதேச அழுத்தமும் அதன் பலவீனங்களும் அதனூடன தீர்வு போன்ற பல தலைப்புகளில் தனது கருத்துக்களை வழங்கினார்.
இச்செயலமர்வில் (ஏ.எச்.ஆர்.சி) நிறுவனத்தின் செயற்றிட்ட முகாமையாளர் என்.அஞ்சலி தேவி, திட்ட முகாமையாளர் எஸ்.சுதர்சினி, திட்ட இணைப்பாளர்கள் பி.ஜெகதீஸ், எஸ்.அனுஜா, கணக்காளர் ஆர்.பிரியாளினி, பிரதி கணக்காளர் சி.எஸ்.ஏன்ஜல் அம்பாறை மாவட்டத்தில்

உள்ள சிவில் செயற்பாட்டாளர்கள், அரசசார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், இளைஞர், யுவதிகள், பெண்கள், அரச உத்தியோகத்தர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :