கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி தீ பரவலுக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இரண்டாம் கட்ட நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக , 1.75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்வரும் வாரம் தொடக்கம் நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட வலயங்களாக பெயரிடப்பட்ட கம்பஹ, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் கடற்றொழிலாளர்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழ், கப்பல் பாதுகாப்பு நிறுவனத்தினால் 420 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment