அமைச்சர் ஜோன்ஸ்டன் அவர்களே, கண்டி அதிவேக நெடுஞ்சாலையை விரைவில் நிர்மாணியுங்கள் - மல்வத்து பீட அனுநாயக்க தேரர் வண. திம்புல்கும்புரே விமலதம்ம தேரர்



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-
கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும்... - ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஶ்ரீனந்தாராம விகாராதிபதி தெனிகே ஶ்ரீ சிரினிவாச ஆனந்த தேரருக்கு தர்மகீர்த்தி கௌரவ நாமத்துடன் சன்னஸ்கோரள மகாதிசா உபபிரதான பீடாதிபதியாக நியமிக்கும் நிகழ்வு 27 ஆம் திகதி மல்வத்து அனுநாயக்க தேரர் வண.திம்புல்கும்புரே விமலதர்ம தேரரின் தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கௌரவ நாமத்தை வழங்கி வைத்தார்..
இதன் போது மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர். அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த மத்திய மாகாண அதிவேக நெடுஞ்சாலையானது மத்திய மாகாணத்திற்கு மிகவும் விசேடமானது.நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு நான் கூறுகின்றேன். நான் நேற்று மாத்தறை சென்றிருந்தேன். இரண்டு மணி நேரத்தில் கடவத்தையை அடைய முடிந்தது. கண்டியில் இருந்து கொழும்புக்கு பயணிக்கும் போது 4 மணித்தியாலங்களுக்கு மேல் செல்கிறது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை பாராட்டுகிறேன்.
இந்த வீதிகள் குறுகலாக இருப்பதால், அவற்றை முந்திச் செல்லக்கூட முடியாது. கண்டியில் இருந்து கொழும்புக்கு பயணிக்க நான்கு மணி நேரம் ஆகும். ஒருவேளை இன்னும் அதிகமாக இருக்கலாம். எனவே எமது மத்திய மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் உறங்குகிறார்களா என கேட்கிறேன். பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில், தலைநகர் கொழும்பு என்பது போல இரண்டாவது தலைநகராக கண்டி உள்ளது ஆனால்எங்கே எமக்கு வீதி என்று கேட்கிறேன்.பின்னால் வரிசையாக சசெல்லும் பாதை தான் நம்மிடம் உள்ளது. னென்றால் வீதி சிறியது. எனக்கு இப்போது எண்பத்தி ஒன்று வயதாகிறது. எனவே, நாங்கள் இறப்பதற்கு முன் நெடுஞ்சாலையை நிர்மாணியுங்கள். கண்டி நெடுஞ்சாலையில் எனக்கு பயணிக்க முடியுமா என்று தெரியவில்லை. கண்டியில் இருந்து கொழும்பு வரை அதிவேக நெடுஞ்சாலையை அமையுங்கள். எனக்கு செல்லமுடியாவிட்டாலும் பரவாயில்லை எப்படியாவது பொதுமக்களுக்காக நெடுஞ்சாலை அமைக்க வேண்டும். இந்த விடயத்தை நாம் ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துகிறோம் என்றார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உரையாற்றுகையில்,
நான் நீண்ட உரையை ஆற்றப் போவதில்லை. எமது வணக்கத்திற்குரிய அனுநாயக்க தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய ரெகவ தேரர் ஆகியோர் ஆனந்த நாயக்க தேரரைப் பற்றி பேசினார்கள். சுமார் முப்பது வருடங்களாக அவரை நாங்கள் அறிவோம். சாசனத்திற்குப் பெரும் சேவையாற்றிய, சாசனத்திற்குக் கடன்படாத ஒரு தலைவராக நான் அவரைப் பார்க்கிறேன் இந்நாட்டு குழந்தைகளுக்கு அறிவுத்திறனை வழங்க கல்வித்துறையில் பெரும் தியாகம் செய்தார். பல்வேறு இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக இந்த சத்கோரளத்திற்கு மாத்திரமன்றி இலங்கை முழுமைக்கும் தர்மத்தை போதித்துள்ளார். அதுமட்டுமின்றி வெளிநாடு சென்ற பிறகும் தம்மத்தை உபதேசித்துள்ளார். எனவே, அவர் பௌத்தத்தைப் பரப்புவதில் உறுதியாக இருக்கிறார் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நான் இந்த நாட்களில் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். இத்தருணத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முழு அரசாங்கம் சார்பாகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பௌத்த மதத்தை நீண்டகாலம் பரப்புவதற்கு உங்களுக்கு பலம் கிடைக்க வேண்டும். நீங்கள் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்ட தேரர். நாட்டுக்குத் தான் முதலிடம். நாடு வீழ்ந்தால் பௌத்தமும் வீழ்ச்சியடையும் என்பது அவருக்குத் தெரியும். எனவே, அவர் தேவைப்படும் போதெல்லாம் அவர் முன்னின்று தன்னை அர்ப்பணித்துள்ளார், எப்பொழுதும் பயமில்லாமல் முன்னுக்கு வந்திருக்கிறார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் உங்களை மிகவும் நேசிக்கின்றார். உங்கள் குடும்பம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இன்று நான் பிரதமரை அழைத்துவர இருந்தோம். ஆனால் கடைசி நிமிடத்தில் அதில் மாற்றம் ஏற்பட்டது. என்னை அழைத்த மைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் எமது அனுநாயக்க தேரர் பேசினார். 2014 நவம்பரில் குருநாகல் தம்புள்ளை கலகெதரவில் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி நாட்டினார் . இதற்கான அனைத்து ஒப்பந்தங்களையும் வழங்கியதுடன் அவர் தோல்வியடைந்ததையடுத்துவுன் அவை ரத்துச் செய்யப்பட்டன. அதை ரத்து செய்யாமல் இருந்திருந்தால் 2018 இல் கடந்த அரசே இதனை திறந்து வைத்திருக்க முடியும். அதை அவர்கள் செய்த வழியில் திறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பலிவாங்கள் செய்ததால் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 2017 ஆம் ஆண்டு கடவத்தை முதல் மீரிகம வரையும் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையும் 1, 2 என இரண்டு பிரிவுகளை கடந்த அரசு ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் கடவத்தையில் இருந்து மீரிகம வரையான நிர்மாணப் பணிகளை முதலாவதாக வழங்கியது.எமது அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் ரூபாவை 60 நாட்களுக்குள் வழங்கினார். என்னால் முடிந்தவரை விரைவாக இதைச் செய்ய நான் கடுமையாக உழைக்கிறேன்.

அடுத்து மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான ஒப்பந்தம் வழங்கப்பட்டது வண. அனுநாயக்க தேரர் சென்று அந்த வீதியை பார்வையிட்டார். இந்த நெடுஞ்சாலை விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் 40 கி.மீ., தூரத்தை நிறைவு செய்து அதனை திறக்க முடிந்தது. நீங்களும் அதே பாதையில் சென்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அத்துடன் பிரதமரின் தலைமையில் பொதுஹெர தொடக்கம் ரம்புக்கனை வரை நெடுஞ்சாலைத் திணைக்களத்தின் ஊடாக நேரடி ஒப்பந்தங்களை வழங்கி பணிகளை ஆரம்பித்தோம். இப்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் திருடுவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. மீதி இருபது கிலோமீட்டர்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, அவை அனைத்தையும் தாமதப்படுத்த முயற்சிக்கின்றனர். சாப்பிடுவதற்காக இந்த நெடுஞ்சாலைகள் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனர். எமது மக்கள் குருநாகல் அதிவேக வீதியில் மட்டும் 100 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிட்டு பயணித்துள்ளனர்.
கடவத்தையில் நுழைந்தவுடன் நேராக ஹம்பாந்தோட்டையில் இறங்க முடியும். ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவின் பேரில் கண்டிக்கான நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பணிகள் 2024 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக இதை செய்து முடிப்போம். நிச்சயமாக நாங்கள் அதை செய்வோம். கோவிட் கோவிட் என்று கூறி நாங்கள் எந்த அபிவிருத்தி செயல்பாடுகளை நிறுத்தவில்லை. எங்களுக்கு டொலர் பிரச்சினை உள்ளது. எமது நாட்டுக்கு டொலர்களை அனுப்பியவர்களை நாம் நாட்டு மாவீரர்கள் என்று அழைத்தோம்.அந்த நாடுகளில் மக்கள் இறந்த போது எமது நாட்டு மாவீரர்களை இலங்கைக்கு கொண்டு வந்தோம். தற்போது இரண்டு லட்சம் பேர் திரும்பிச் சென்றுள்ளனர். இந்தப் பிரச்சினைகளைத் எமக்கு தீர்க்க முடியும். வருமானத்தைப் பெருக்கி, செலவைக் குறைத்து இந்த நாட்டை எப்படியாவது அபிவிருத்தி செய்வோம். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, குறித்த நேரத்தில் பணிபுரிந்து, தங்கள் பணியை முறையாக செய்தால் பிரச்னைகள் தீரும்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உத்தரவின்படி, இந்த அதிவேகப் பாதையை நிறைவு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொண்ணூறு சதவீத காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் பத்து சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் முடிவடையும். கண்டி அதிவேகப் நெடுஞ்சாலை நிறைவடையும் வரை பல வருடங்களாக மாநாயக்க தேரர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நெடுஞ்சாலைகள் காரணமாக எவ்வளவு நேரத்தை மிச்சப்படுத்துகின்றன? விரைவில் கண்டிக்கு செல்லமுடிந்தால் இப்பகுதியில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :