கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் சௌதாப் ஒசைம் வலீயுல்லாஹ் அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவிடமிருந்து ஜனாதிபதி சாரணர் பதக்கத்தினை பெற்றுக் கொண்டார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் சௌதாப் ஒசைம் வலீயுல்லாஹ் அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவிடமிருந்து ஜனாதிபதி சாரணர் பதக்கத்தினை பெற்றுக் கொண்டார்.

அக்கரைப்பற்று – கல்முனை சாரணர் இயக்கத்தின் சார்பில் கடந்த 10 வருடங்களின் பின்னர் அம்பாறை மாவட்டத்திலிருந்து இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ஆங்கில மொழி மூலமாக கல்வி கற்ற இம் மாணவன் 2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்

உலக சாரணர் தின விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
சாரணர் இயக்கமானது, 172 நாடுகளைச் சேர்ந்த 52 மில்லியன் சிறுவர்களைக் கொண்ட சிறுவர்களுக்கான உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாகும். ஒரு சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த விருது, ஜனாதிபதி சாரணர் பதக்கம் ஆகும்.
இவ்விழாவில் கலந்துகொண்ட இலங்கையின் தலைமைச் சாரணர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு, சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்பிரித் பெர்ணான்டோ அவர்களால் சாரணர் கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகரான பேடன் பவல் பிரபுவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சாரணருக்கும் ஜனாதிபதி சாரணர் விருதினை வழங்கினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமாந்தரமாக மாகாண மட்டத்தில் ஒன்பது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், 700 ஜனாதிபதி சாரணர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்து மாகாணங்களையும் இணைய வழியில் நேரடியாக இணைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் தேசிய சாரணர் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தமை தொடர்பான அறிக்கையை, உதவிப் பிரதம ஆணையாளர் பிரபாத் குணரத்ன ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :