கல்வியை முடித்துவிட்டிருக்கும் மாணவிகள் உற்பட சுய தொழிலில் ஆர்வமுள்ளவர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்கி வரும் டலண்ட் ஹப் அகடமிக் அண்மையில் பயிற்சிகளை முடித்துக் கொண்டவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டரா நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அக்டமியின் பணிப்பாளர் பஸ்லியா ரமீஸ் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கலந்து கொண்டிருந்தார். கௌரவ அதிதிகளாக இலங்கைக்கான ஈரான் தூதுவராலயத்தின் கலாசாரப் பிரவின் கவுன்சிலர் கலாநிதி பி. முஸாமி குதர்சி கொழும்பு டைம்ஸ் இணையத்தளத்தின் பணிப்பபாளர் எம்.சி.றசூல்தீன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் அனுசரனையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது கேக் ஏனைய உணவு வகைகள் மற்றும் ஆடைத் தயாரிப்புக்களில் தொழிற் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட சுமார் 200 க்கும் மேற்பட்டோர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிறந்த தயாரிப்புப் பொருட்கள் கண்காட்சிக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்நதபோது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் அதிக திறமைகளைக் காட்டிய விஷேட பரிசில்கள் நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment