நற்பிட்டிமுனையில் என்.பி.எல். கிண்ண சுற்றுத்தொடரின் முதல் போட்டியில் மருதமுனை'பிறைட் பியுசர்' அணி வெற்றி.



றாசிக் நபாயிஸ், அஸ்லம் எஸ்.மௌலானா-
ற்பிட்டிமுனை கிரிக்கெட் விளையாட்டுக் கழகத்தினால் (என்.சி.சி.) நடாத்தப்படுகின்ற அணிக்கு 11 பேர் இருபதுக்கு இருபது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி என்.பி.எல்.லீடர் வெற்றிக் கிண்ண சுற்றுத் தொடரின் ஆரம்ப வைபவம் நற்பிட்டிமுனை அஷ்ரஃப் விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான றஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இச்சுற்றுப் போட்டியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டை பிரதிநிதுத்துவப்படுத்தும் 16 அணிகள் மோதவுள்ளது. இதில் ஆரம்ப போட்டியில் மருதமுனை பிறைட் பியுசர் விளையாட்டுக் கழகமும் கல்முனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடாத்தினர்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கோல்ட் ஸ்டார் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட இணக்கம் தெரிவித்து 18 ஓவர்கள் நிறைவிலே சகல விக்கட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிறைட் பியுசர் அணியினர் 17.4 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில்
சிறப்பாட்டக்காரராக பிறைட் பியுசர் அணியின் ஹைர் நஷாம் தெரிவானார்.

இந்நிகழ்வில் பிரின்ஸ் கல்லூரி முதல்வர் எம்.எம்.றியாஸ், கல்முனை உயர் நீதிமன்ற உத்தியோகத்தர் எம்.ஐ.நிரோஸ், ஆசிரியர் ஐ.எம்.றிபான் ஆசிரியர், எம்.சமீம் மௌலவி மற்றும் எச்.எம்.நிஸ்பான் உள்ளிட்டோரும் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :