குளோபல் பீஸ் பல்கலைக்கழகம்; யஹியாகானுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கியது!





குளோபல் பீஸ் பல்கலைக்கழகத்தின் தொழில்முறை கல்வி பணிக்கான உலகளாவிய கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் யஹியாகான் பௌண்டேசனின் ஸ்தாபகரும் தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமான அல் ஹாஜ் ஏ.சி. யஹியாகானுக்கு சிறந்த வியாபார முகாமைத்துவத்துக்கான கௌரவ கலாநிதிப்பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தது.

27.02.2022 அன்று வெள்ளவத்தை சபாயா ஹொட்டேலில் இடம்பெற்ற குறித்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போதே மேற்படி கௌரவ கலாந்நிதிப் பட்டத்தை யஹியாகான் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாத்பதியும் தற்போதைய e soft நிறுவனத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் கலாநிதி சந்தரசேகரன் அவர்கள் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வின்போது இலங்கையச் சேர்ந்த 15 பேர் கௌரவ கலாநிதிப்பட்டங்களைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :