வருடாந்தம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் நூறுகோடி மக்களின் எழுச்சி இம்முறை இலங்கையிலும் கொண்டாடப்பட்டது. வன்முறைகள் இல்லாது வாழ்தல் கொண்டாடப்பட வேண்டியது – பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், அட்டனில் நோர்வூட் மைதானத்தில் தேசிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனமான சமூக நல்வழி மன்றத்தின் பிரதான பொறுப்பாளர் திருமதி சந்திரமதியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மலையகத்தில் உள்ள மன்றத்தை சார்ந்த பெண்கள், மற்றும் ஏனைய இளம் பெண்கள் இணைந்து இந்நிகழ்வை ஒரு கொண்டாட்டமாக நடத்தியுள்ளனர். இந்நிகழ்வில், மலையகத்தின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நாட்டார் பாடல்கள் என்பன பெண்களால் அருமையாக பாடப்பட்டது.
தெற்காசிய பெண்கள் அமைப்பின் செயற்பாட்டளரான கமலாபாசின் அவர்களால் தெற்காசிய நாடுகளுக்கு இப்பிரச்சார எழுச்சி முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் தெற்காசிய பெண்கள் அமைப்பின் உறுப்பினரும் பெண்ணிய செயற்பாட்டளருமான கமலா வாசுகியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment