மாகாண கல்வி அமைச்சின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கல்விகற்கும் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதற்கமைய ஹாலிஎல யெல்வர்டன் தமிழ் வித்தியாலயம், பதுளை ரத்னபால வித்தியாலயம், மீகஹகிவுல வித்தியாலயம் மற்றும் வெலிமடை கந்துருதேக முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அதேவேளைக் கொழும்பு, குருநாகல் உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்களிலும் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் இம்முறையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய 'காந்தா சவிய' மகளிர் சக்தி அமைப்பினால் இம்முறை சுமார் 3000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் 'காந்தா சவிய' அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, ஆளுநரின் செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment