டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "ஜனனி" எனும் தொனிப்பொருளினை மையமாக வைத்து பெண்களுக்கான செயலமர்வொன்று திருகோணமலையில் இடம் பெற்றது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (CAFFE) ஏற்பாட்டில் நேற்று (25) திருகோணமலையில் உள்ள உப்புவெளி தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம் பெற்றது. கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய வழி முறை ஊடான நுட்பங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், பெண்கள் சங்க பிரதிநிதிகள் என சுமார் 40 பெண்கள் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி தேர்தல் முறை மற்றும் அதன் ஊடான உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் எவ்வகையானது உள்ளூராட்சி ஆளுகைக்குட்பட்ட நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் (கிழக்கு மாகாணம்) எஸ்.சுதாகரன் வளவாளராக கலந்து கொண்டு தெளிவுபடுத்தினார்.
போலிச் செய்திகள், ஊடக வழி முறைகள், தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பிலான விளக்கங்களை வளவாளராக கலந்து கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியருமான ரிப்தி அலி தெளிவுபடுத்தினார்.
குறித்த நிகழ்வில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், கெபே அமைப்பின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ராபில், உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், மாதர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment