மட்டக்களப்பு - ஏறாவூர் றகுமானியா வீதியில் வசித்து வரும் நபரொருவர் தனது (18) வயதுடைய மகனை காணவில்லை என்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து நேற்றிரவு (22) மின்சாரம் தடைப்பட்ட வேளை 8.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று தந்தை தெரிவித்தார்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் க.பொ.த உயர் தரத்தில் தொழிநுட்பப் பிரிவில் கற்று வரும் எம்.ஏ.எம்.அஸ்பக் எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மாணவன் பயணித்த துவிச்சக்கர வண்டி அவரது இல்லத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகிலிருந்து இன்று (23) காலை 10.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment