கிழக்குமாகாண கல்விச்செயலாளர் திசாநாயக, பணிப்பாளர் புள்ளநாயகம் சம்மாந்துறையில்...



சம்மாந்துறைவலயம்தயாரித்த மாணவர்க்கான மூன்று சுயகற்றல் நூல்கள் வெளியிட்டுவைப்பு
காரைதீவு சகா-

கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக மற்றும் கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் நேற்று(24)வியாழக்கிழமை சம்மாந்துறைக்கு விஜயம்செய்தனர்.

சம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனை நடாத்திய நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துசிறப்பித்தனர்.
இந்நூல் வெளியீட்டுவிழா, சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில்(தேசிய பாடசாலை) நேற்று நடைபெற்றது.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள பொதுப்பரீட்சைகளில் மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் செயற்றிட்டத்தின்கீழ் ,இழந்தகல்வியை மீட்கும் கொவிட்19 விடுமுறைக்கான செயற்றிட்டமாக சம்மாந்துறை கல்வி வலயம் தயாரித்த மாணவர்களுக்கான மூன்று சுயகற்றல் நூல்கள் வெளியிட்டுவைக்கப்பட்டன.

தரம் 11க்கான விஞ்ஞானம் மற்றும் கணித நூல்கள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தரம்4க்கான கணிதம் ,தமிழ்மொழி ,சுற்றாடல்சார் செயற்பாடுகளடங்கிய நூல் என்பன வெளியிட்டுவைக்கப்பட்டன.கூடவே இவ்வாண்டுக்கான வலய வருடாந்த அமுலாக்கத்திட்ட கைநூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

முன்னதாக ,அதிதிகள் மாலைசூட்டப்பட்டு பாண்ட்வாத்தியம்சகிதம் வரவேற்கப்பட்டு, தேசிய மாகாண மற்றும் வலயக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டு, இந்து ,இஸ்லாமிய, கிறிஸ்தவ ,பௌத்த மத இறைவணக்கத்துடன் அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாயின.அரங்க நிகழ்வுகளை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

தொடர்ச்சியாக, நூல்அறிமுகவுரைகளை ஆசிரியஆலோசகர்களான எம்.எம்.எம்.ஜௌபர் ரி.எல்.றைஸ்டீன் ஏ.ஜி.எம்.கிஷோர் ஆகியோர் நிகழ்த்தினர் . பின்னர் 3நூல்களையும் பணிப்பாளர் நஜீம் அதிதிகளிடம் வழங்கி வைத்து வெளியிட்டுவைக்கப்பட்டன.பின்னர் அவை அதிபர்களிடம் வழங கிவைக்கப்பட்டன.

கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக மற்றும் கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் பொன்னாடைபோர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதன்பின்னர் அவர்களது உரைகள் இடம்பெற்றன.

மாணவர்களின் மூவின கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கல்விஅபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எ.எல்.எ.மஜீட் நன்றியுரையாற்றினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :