திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் காணி பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை



ஹஸ்பர்-
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் காணி பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (23) இடம் பெற்ற இவ் நடமாடும் சேவையானது காணி ஆணையாளர் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காணிக்கான ஆவணங்களை பெறுவது மற்றும் உரித்து படிவம் பெறுவது உள்ளிட்ட விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டன.
இதில் பிரதேச பொது மக்கள் காணி தொடர்பான ஆவண விடயங்களை கலந்தாய்வு செய்ததுடன் அவர்களுக்கான உரித்து படிவம் பெறுவது தொடர்பிலும் இதன் போது ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி.தசநாயக்க, உதவி காணி ஆணையாளர் ஜீ.ரவிராஜன் ,உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் காணிக் கிளை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :