தலவாக்கலை அட்டன் பிரதான வீதியில் லோகி தோட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த 200 வருட பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று 21.2.2022 மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது வீட்டிலிருந்து தலவாக்கலை நகருக்கு சென்றுக்கொண்டிருந்தபோது தலவாக்கலை லோகி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் வெட்டிக்கொண்டிருந்த ஆலமரத்தின் கிளையொன்று உடைந்து பிரதான வீதியின் நடுவில் விழுந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது காயமடைந்த நபரை முச்சக்கரவண்டியில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் போது வீதியில் சென்ற முச்சக்கர வண்டியொன்றும் சேதமடைந்துள்ளது.வன திணைக்களத்தின் அனுமதியை பெற்றிருந்தபோதிலும் குறித்த ஆல மரத்தின் கிளைகளை வன திணைக்களத்தின் அனுமதியுடன் வெட்டியபோதும் உரிய பாதுகாப்பின்றி மரத்தின் கிளைகளை வெட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உரிய பாதுகாப்புடன் கிளைகள் வெட்டப்பட்டிருந்தால் இவ்வாறு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது என ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் வீதியை மறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
200 வருடம் பழைமை வாய்ந்த மரத்தினை வெட்ட யார் அனுமதி கொடுத்தது.பிரதான வீதியில் 100 ற்கு கணக்கான வாகனங்கள் செல்லும்போது பிரதான வீதிக்கு அருகாமையில் இருக்கும் இந்த மரத்தின் கிளைகளை வெட்ட யார் அனுமதி கொடுத்தது. அத்துடன் இரு மறுங்கிலும் வாகனங்கள் சென்றுக்கொண்டு இருக்கும்போது உரிய பாதுகாப்பு வழங்காமல் மரத்தினை வெட்டிய அனுமதி வழங்கியது யார்? இதனால் இன்று ஒரு அப்பாவி உயிர் போய்விட்டதே போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அட்டன் தலவாக்கலை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment