ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிவர்த்திக்கப்படும்.- உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ்


சலீம் றமீஸ்,எம்.வை.அமீர்-
ழியர் சங்கத்தின் தலைவரால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழக செயற்பாட்டில் கல்விசாரா ஊழியர்களின் பங்கு என்பது மிகப்பிரதனமானது. இவ்வாறானவர்களின் நியாயமான கோரிக்கைகள் எவ்வித தன்குதடைக்களுமின்றி நிவர்த்திக்கப்படும்; என்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 22 ஆவது வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிருவாக சபைத் தெரிவும் (2022.02.24) பல்கலைக்கழக ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த பிரதான மாநாட்டு மண்டபத்தில் தலைவர் எம்.எம். நௌபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களும் கௌரவ அதிதியாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மற்றும் விஷேட அதிதியாக பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உபவேந்தர் பேராசிரியர் றமீஸ்,

தான் இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த போது கடமையாற்றிய பல முகங்கள் இப்போதும் பணியில் இருப்பதும்; அவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகளும் எவராலும் மறக்கமுடியாதவை. பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்கு உந்துதலாய் இருக்கும் கல்விசாரா ஊழியர்களும் கௌரவிக்கப்பட வேண்டும். எதிர்காலங்களில் சிறந்த ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு பிரதான நிகழ்வுகளில் இவர்களும் கௌரவிக்கப்படுவர் என்றும் ஊழியர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் விதத்தில்; அவரவருக்குத் தேவையான துறைசார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சம்மந்தப்பட்டவர்களை பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தினை உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல சகல ஊழியர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக கேட்டுக்கொண்ட உபவேந்தர் இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போன்று கருத்து வேறுபாடுகள் அற்று இயங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பதிவாளர் அல் ஹாஜ் எச். அப்துல் சத்தார்,

பல்கலைக்கழகத்தினை உயர்நிலைக்குக் கொண்டுசெல்வதில் ஒத்துழைக்கும் ஊழியர்களின் பங்கைப் பாராட்டிப் பேசிய பதிவாளர், இன்னும் சில ஊழியர்கள் இந்த பல்கலைக்கழகத்தை முன்கொண்டுசெல்ல தங்களது பங்கையும் ஆற்ற முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இவற்றுக்கு ஊழியர்களிடமிருந்து சிறந்த வெளிப்பாடுகள் அவசியம் என்றும் தெரிவித்தார். பல்கலைக்கழகத்துக்காக பலர் ஆற்றும் பங்களிப்புக்கள் சிலரது போக்குகளால் மலினப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக சேவையில் 25 வருடங்களைக் கடந்த பல்கலைக்கழக ஊழியர்கள் பலர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், தென்கிழக்குப் பல்கலைக்கழக சேவையில் அதிகுறைந்த விடுமுறைகளைப் பெற்றிருந்த ஊழியரான ஐ.எல்.எம்.நிலாம்டீன் கௌரவிக்கப்பட்டது விஷேட அம்சமாகும்.

இதன்போது ஊழியர் சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் எம்.எம்.நௌபர், உபதலைவர் கே.எல். இப்றாஹிம், செயலாளர் எம்.ரி.ஹாசீர் முகம்மட், உபசெயலாளர் ஏ.எம்.நஸ்வி, உபசெயலாளர் (பிரயோக விஞ்ஞான பீடம்) ஏ.எம். றம்ஸான், பொருளாளர் எம்.ஜி.ரொஸான், நலன்புரி இணைச் செயலாளர்(ஆண்) எம்.எம்.எம்.காமீல், நலன்புரி இணைச் செயலாளர்(பெண்) ஏ.ஆர். ஜிப்ரியா நௌபர், உள்ளக கணக்குப் பரிசோதகர் எம்.எல்.றினாஸ் உள்ளடங்களாக பல்கலைக்ழகத்திலுள்ள அனைத்து திணைக்களங்களுக்கான பிரதிதநிதிகளும் தெரிவு செய்யப்பட்டனர். அதாவது, எம்.சி.ஏ.கபூர், எம்.ரி.எம்.தாஜூதீன், ஏ.எல்.சதக்கதுல்லாஹ், ஏ.சி.றியாஸ், வை.முபாறக், எம்.எம்.எம்.ஜெஸீம், ஏ.எல்.எம்.பைறோஜ், ஹசீம், எஸ்.றிபாய்தீன், இஸட்.ஏ. லாபீர், றஸாக் முகம்மட் அலி, றிஸ்வான். ஐ.எல்.எம்.அனஸ், எம்.எம்.எம்.றம்ஸீன், ஏ.எம்.ஏ.நவாஸ், எம்.ஐ.தாஹீர், வை.துஷ்ஜேந்திரா, ஏ.ஆர்.சலாப்தீன் ஆகியோர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :