அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் இடைநிறுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படுமா? என பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
சமகாலத்தில் பெரிதும் வேண்டப்படுகின்ற இப்பயிற்சிநெறி காரைதீவு தொழிற்பயிற்சிநிலையத்தில் கடந்த 1997 இல் ஆரம்பிக்கப்பட்டு பல வருடகாலமாக சிறந்தமுறையில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் இப் பயிற்சிநெறியின் போதனாசிரியர் 2020 இல் மரணித்ததன் காரணமாக அப்பயிற்சிநெறி இடைநிறுத்தப்பட்டது.
அப்போதனாசிரியருக்கு பதிலாக வேறு போதனாசிரியர்கள் இன்று வரைக்கும் நியமிக்கப்படவும் இல்லை, பயிற்சிநெறிகள் இடம்பெறவும் இல்லை. தற்காலத்திற்குத் தேவையான இப்யிற்சிநெறியை மிண்டும் ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவவேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்:
ஒரு அதிபர் மரணித்தால் அப்பாடசாலையை மூடுவதா? ஒரு ஆசிரியர் மரணித்தால் அவ்வகுப்பை மூடுவதா?,இப்பாடத்துறைக்க அவரைத்தவிர இலங்கையில் வேறெந்த போதனாசிரியரும் இல்லையா? எனவே இதனை ஒரு புறக்கணிப்பிக பார்க்கவேண்டியுள்ளது.
இதன் காரணமாக இப்பிரதேச இளைஞர்யுவதிகள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறி பெறுவதாயின் அக்கரைப்பற்று தொழிற்பயிற்சி நிலையத்திற்கோ அல்லது சம்மாந்துறை தொழிற்பயிற்சி நிலையத்திற்கோ தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே எதிர்வரும் 2022 இரண்டாம் அரையாண்டிற்காக காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறி ஆரம்பிக்குமாறு இப்பிரதேச இளைஞர் யுவதிகளின் பெற்றோர் காரைதீவில் பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுப்பதுடன். இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment