ஓட்டமாவடி எக்ஸ்லெண்ட் கொலேஜில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (23) இடம்பெற்றது.
மாணவர்களின் கல்வி அறிவை அதிகரிக்கும் நோக்கில் கொலேஜ் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஐந்து நாட்கள் கொண்ட "துரித ஞாபகப்படுத்தல்" பாடநெறியொன்று நடாத்தப்பட்டது.
குறித்த பாடநெறியில் கலந்து கொண்ட மாணவர்களின் திறமைகளை பாராட்டி, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
எக்ஸ்லெண்ட் கொலேஜின் பணிப்பாளர் எம்.எம்.நவாஸ் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ் ஹாஜி, பாடநெறி நடாத்திய வளவாளர் சஹீட் ஜெலீல், மௌலவிமார்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment