சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கியில் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக 74வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறா ,சம்மாந்துறை நம்பிக்கையாளர்சபை,சம்மாந்துறை உலமா சபை,சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தானமுகாம் சம்மாந்துறை பத்ர் பள்ளிவாசலில் நேற்று (5)நடைபெற்றது.
சுமார் 50 பேர் இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் இரத்த தான முகாமில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆசாத் என்ஹனிபா,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா,வைத்தியசாலை திட்டமிடல் வைத்தியர்நியாஸ் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறா, நம்பிக்கையாளர் சபை, உலமா சபை சம்மாந்துறை வர்த்தகசம்மேளன நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் அனுசரைனையுடனும் இளைஞர்கள்,பெண்கள் எனஅதிகளவானோரின் பங்கு பற்றுதலுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment