உளவள சிகிச்சையாளரான கலாநிதி எம். என். லூக்காமானுல் ஹக்கீம் எழுதிய " குழந்தைகளின் நடத்தைகளும் உளவியல் வழிகாட் டல்களும் " நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பில் (19.02.2022) நிகழ் நிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி கடம்பநாதன் தானபாலசிங்கம் (consultant psychiatrist)அவர்கள் கலந்து கொண்டார். வரவேட்புரையை எழுத்தாளர் ஏ.ஸீ. எம். நதீர் மற்றும் நூல் பற்றிய விமர்சன உரையை வைத்தியர் எம். ஜி. எம். மபாஸ் (consultant psychiatrist) ஆகியோரும் நிகழ் த்தினார்கள்.
இந்நிகழ்வில் உளவியல் துறை மாணவர்கள், பெற்றோர்கள், ஏழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கால அவசர உலகில் நாம் ஒரே பார்ப்பர்புடனே ஓடிக் கொண்டிருகி ன்றோமே தவிர நம்மயும் நம் குழந்தைகளையும் பராமரிக்க தவறி விடுகின்றோம். இதனால் நம் குழந்தைகள் அதிகம் உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை ஆகும். குழந்தைகளைப் பராமரிப்பது மற்றும் அவர்களை புரிந்து அவர்களுக்கு ஏற்றப்போல நடப்பது என்பது எல்லா பெற்றோர்களி னாலும் ஆசிரியர்களி னாலும் முடியத காரியமே எனலாம். பலரும் தங்கள் குழந்தைகளை இப்படி வளர்ப்பது என்ற குழப்பதிலேயே உள்ளனர்.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக வே இந்நூலாசிரியரினால் அனைவருக்கும் விளங்கக் கூடிய எளிமையான மொழிநடை மற்றும் உதாரணங்களுடன் இந்நூல் பிரசவிக்க ப்படுள்ளது.
மேலும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது ஒரு கைநூல் ஆக வடிவம் பெற்றுள்ளமை இந்நூலின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அனஸ் பாத்திமா நுஸ்ரத் நுாலாசிரியரிடமிருந்து நுால்பிரதி ஒன்றையும் பெற்றுக் கொண்டாா்.
0 comments :
Post a Comment