அன்று யாழிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என்று புலிகள் அறிவித்தார்கள். இன்று சண்முகாவில்.-முனாஸ்



ன்று யாழிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என்று புலிகள் அறிவித்தார்கள்.

அந்த மக்களில் வயோதிபர்கள், சுக வீனமானவர்கள், சிறுவர்கள், நடக்க முடியாதவர்கள் இவ்வாறு அனைத்து மக்களும் செய்வதறியாது அவர்களுடைய சொத்து சுகம் அத்தனை எத்தனை வருடங்கள் சம்பாதித்த சம்பாத்தியங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு அல்லோலப்பட்டு தங்களின் உயிர்களுக்கு பயந்து உடனடியாக வெளியேறினார்கள்.
அதனை செய்தது புலிகள் ஆனால் இன்று திருகோணமலை சண்முகா வித்தியாலய சம்பவம் அந்த பாசிச வாதிகளின் எச்சங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் ஒரு உண்மை அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லிம்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவிடும் எங்களுக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடந்து விடுமோ என்று உயிருக்கு அஞ்சி சொத்து சுகங்களை வீசி விட்டு வெளியேறினார்கள்.

ஆனால் இங்கே நடந்திருப்பது தன் கலாச்சாரம் சமயம் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ஆடையை குறை சொல்லும் கேவலம் நடக்கிறது என்றால் அதனை விட்டுக்கொடுக்க முடியாது.
இது தன் சமயம் சார்ந்த தன் உடை சார்ந்த தனது தனிப்பட்ட உரிமை என்று போராடும் அந்த ஆசிரியை பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த ஆசிரியைக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதில் எந்த வித தவறும் இல்லை.
மனிதநேயத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய படித்தவர்கள் இளம் மாணவிகளுக்கு மாணவிகளை வீதிக்கிறக்கி இனவாதத்தையும் முஸ்லீம் சமூகம் ஏதோ எதிரிகள் போன்று அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய நிர்ப்பந்தித்து இனவாதத்தை மாணவிகள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறார்கள்.
இந்த கேவலமான நடவடிக்கையினை நடுநிலைமையாக சிந்திக்கின்ற மனிதநேயம் உள்ள எந்த ஒரு தமிழ் சகோதரர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது சிலருடைய முகநூல் பதிவுகள் அதற்கு சான்று பகர்கின்றன.
ஆனால் இது மிகக் கேவலமாகவும் அசிங்கமாகவும் இனவாதத்தின் உச்சக்கட்டமாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது.
சண்முகா மகளிர் கல்லூரி என்பது ஒரு அரசின் கீழ் அரசின் பணத்தில் இயங்கும் பாடசாலை. அங்கு தங்களின் கலாச்சாரம் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் அப்பன் வீட்டு பணத்தில்தான் பாடசாலையை நடாத்த வேண்டும். பாடசாலை அரசின் பணத்தில் நடக்கிறது என்றால் அரசின் கட்டளைக்கு கட்டுப்படவேண்டும்.
அங்கு இனவாதத்தை விதைக்க முடியாது இனவாதிகளை தூசு தட்டி தூரப்போடவேண்டிய இடம்தான் பாடசாலைகள் பாடசாலைகள் என்பது மனித நேயத்துடன் ஒழுக்கமும் கல்வியும் கற்றுக் கொடுக்கும் இடமே தவிர இனவாதத்தை தூண்டும் இனவெறியர்களை உருவாக்கும் இடமல்ல என்பதை சண்முகா வித்தியாலயம் சார்ந்த அந்த எச்சங்கள் புரிந்து கொள்ளட்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :