மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான அல்ஹாஜ் அல்ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கல்விக்கோட்டத்தில் புதிதாக 27வது பாடசாலையாக மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயம் ஆரம்பிப்பதற்கும் அதற்கான ஆரம்பக்கட்ட அபிவிருத்திக்குத் தேவையான வகுப்பறை மற்றும் அதிபர் காரியலயம் போன்றவற்றை அமைப்பதற்காகவும் நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டமைக்காகவும் இப்பிரதேச மக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்குடாத்தொகுதி முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் பிரதியமைச்சராக இருந்து மாவட்ட மக்களின் நன்மதிப்பைப்பெற்ற அரசியல் பிரமுகராக வாழ்ந்து மறைந்தவர். அவரின் ஞாபகார்த்தமாக அவர் பெயரில் இப்பாடசாலை அமையப்பெறுவது முக்கியமானதாகும்.
அத்தோடு, செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தினை உயர்தரப் பாடசாலையாக தரமுயர்தியதுடன், செம்மண்ணோடையில் மர்ஹூம் ஈஸா லெப்பை மாஸ்டர் பெயரில் ஆரம்பப்பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறமை பாராட்டுக்குரியது.
இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கல்குடாத்தொகுதி மக்கள் சார்பான நன்றிகளைய் தெரிவித்துக் கொள்வதாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment