இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் அடிப்படை ஊடக கல்வியறிவு மற்றும் உண்மைச் சரிபார்ப்பு பயிற்சிப்பட்டறை



எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
லங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் கடந்த 19.02.2022 சனிக்கிழமை "அடிப்படை ஊடக கல்வியறிவு மற்றும் உண்மைச் சரிபார்ப்பு" தொடர்பான பயிற்சிப்பட்டறை
ஹோட்டல் ஈஸ்ட் லகூன், மட்டக்களப்பில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் விடிவெள்ளி தலைமை பதிப்பாசிரியர் பைரூஸ் அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்,யுவதிகள் கலந்து சிறப்பித்தனர். இதன் போது நவீன காலத்தில் ஊடகத்துறையில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும்,அதிகரித்து செல்லும் இணையத்தின் துரித வளர்ச்சியில் போலி செய்திகளின் தாக்கம் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு தடுக்கலாம் மற்றும் போலி செய்திகளை எவ்வாறு அடையாளம் காணலாம்! தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகள் இப்பயிற்சிப்பட்டறையில் Fact Seeker நிருவன பிரதிநிதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் மூலமாக வழங்கப்பட்டது.

அத்தோடு இப்பயிற்சிப் நெறியில் கலந்து கொண்டவர்களுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :