மகளிர் தினத்தை கொண்டாட விரிவான ஏற்பாடுகள்.



காரைதீவு சகா-
திர்வரும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதற்கான பேரவையின் செயற்பாட்டு உயர்பீட பிரதிநிதிகளின் விசேட கூட்டம் அண்மையில்  சம்மாந்துறையில்பேரவையின் தலைவர் ஜலீல் ஜீ யின் தலைமையிலும், பேரவையின் பொதுச் செயலாளர் - கல்விப் பணிப்பாளர் .வீ. ரீ. சகாதேவராஜா அவர்களின் வழிநடாத்தலிலும் இடம்பெற்றது.

அங்கு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிர் தினத்தை முன்னிட்டு கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பட்டவுள்ளது.
அதற்கான கவிதைகளை ஏற்றுக் கொள்ளும் தினம் இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு(8.3.2022) நீடிப்பது என்று முடிவானது.

சிறந்த இலக்கியப் பணி செய்த பெண் இலக்கியவாதிகளை தெரிவு செய்து" மங்கையர் திலகம்" என்ற உயரிய விருது வழங்கப்படவிருக்கிறது.

தொகுதிக்கான கவிதைகளை தகைமை கருதி ஏழு பேர் கொண்ட தெரிவுக்குழு மற்றும் மங்கையர் திலகம் விருது பெறுவோரை இனம் காண்ப்பதற்கான 4 பேர் கொண்ட தெரிவுக்குழு என்பன தெரிவாகியது.

மேலும் பேரவையின் உயர்பீட பிரதிநிதிகளை விழாவின் போது சிறப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டு வது போன்ற பல முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. விழா இணைப்பாளராக கவிஞர்.ஏ ஆர் எம்.ஹுசைன் நியமிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :