'சுபீட்சத்தின் நோக்கு' அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமையத் தொழில் செய்யும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள விதத்தில் சேவை வழங்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட பதுளை தொழிலாளர் அலுவலகக் கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தலைமையில் (18-02-2022) அன்று இடம்பெற்றது.
26 கோடி ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த இரண்டு மாடிக் கட்டிடத்தொகுதியில் பதுளை மாவட்டத்தின் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட 30,000 மேற்பட்ட தொழில் செய்யும் மக்களின் ஊழியர் சேம நிதியம் மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதி விவகாரங்கள் நிர்வகிப்படவுள்ளது. அதேவேளை ஊவா மாகாணத்தின் பதுளை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் தொழிலாளர் பொறியியல் சேவைகள் இந்த கட்டிடத்தொகுதியிலிருந்து செயல்படுத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும். இதற்கமைய சுமார் 65,000 ஊவா தொழில் செய்யும் மக்களுக்கு பாரிய சேவையை வழங்குவதற்கு இந்த அலுவலகம் தயாராகவுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சுதர்சன தெனிபிட்டிய, அரவிந்த குமார், பதுளை மேயர் பிரியந்த அமரசிறி மற்றும் தொழிலாளர் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment