சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தினருக்கும் காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்குமிடையிலான சினகேபூர்வ கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து சகல விக்கட்டுக்களையும் இழந்து 20 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 119 எனும் பெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினர் 16 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கட்டுக்களை மட்டும் இழந்து வெற்றியிலக்கை அடைந்தனர். சிறப்பாக விளையாடிய சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டுக்கழக வீரர் எம்.எச்.எம். முஸ்பீக் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் நாபீர் பௌண்டேசன் மற்றும் ஈ.சி.எம். நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் கலாநிதி உதுமான் கண்டு நாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டுக் கழக தலைவர் ஆசிரியர் ஏ.ஆதம்பாவா, செயலாளர் ஆசிரியர் அலியார் பைஸர், உப தலைவர் ஆசிரியர் ஏ.எம். நியாஸ், பொருளாளர் ஆசிரியர் ஆர்.எம். இர்பாத், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.றிசாத், சாய்ந்தமருது கிரிக்கட் சங்க கிரிக்கட் அபிவிருத்திக்குழு தவிசாளர் ஏ.எச்.எம். முர்ஷித், ஆசிரியர்களான எம்.எம். ரஜீப், எம்.வை.எம். றக்கீப், கிழக்கின் கேடயம் பொதுச் செயலாளர் யு.எல்.என் ஹுதா உமர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி. அன்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment