தேடப்பட்டு வந்த தனது மகனை கண்டுபிடித்துள்ளதாக காணாமல் போன நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்தார்.
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றகுமானியா வீதியில் வசித்து வந்த, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் எம்.ஏ.எம்.அஸ்பக் எனும் மாணவன் கடந்த 22 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல் போன மாணவனை ஏறாவூர் பொலிஸாரின் உதவியுடன் கண்டுபிடிக்க குடும்பத்தார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த மாணவன் 3 நாட்களின் பின்னர் நேற்று (24) மாலை கொழும்பு பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளதாக மாணவனின் தந்தை தெரிவித்தார்.
மாணவன் சுயமாக தனது வீட்டை விட்டு சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment