ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் புதிய ஆரம்ப பாடசாலை



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
ட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக ஆரம்ப பாடசாலை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கிடைக்க பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பிரத்தியோக செயலாளர் ஏ.ஏ.நாஸர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அரபா நகர் கிராமத்தில் அமையப் பெறவுள்ள இவ் ஆரம்ப பாடசாலைக்கு கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசத்தின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான மர்ஹும் எம்.பி.எம்.முஹைதீன் அப்துல் காதரின் நினைவாக முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயம் என்று இப்பாடசாலை அமையப் பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்புத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் இப்பாடசாலை ஆரம்பிப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டதற்கமைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் அரபா நகர் கிராமத்தில் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயம் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பாடசாலையானது ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் 27வது பாடசாலையாக அமையப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :