வீட்டுச் சூழலில் பிள்ளைகள் விரும்பி கல்விகற்கும் நிலைமை உருவாக வேண்டும் : உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவிப்பு



நூருல் ஹுதா உமர்-
வீட்டுச் சூழலில் பிள்ளைகள் விரும்பி கல்விகற்கும் நிலைமையினை பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுத்தல் வேண்டும். பெற்றோர்கள் வீட்டில் தொலைக்காட்சி உள்ளிட்ட இணையத்தள பாவணையினை கட்டுப்படுத்துதல் வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்தின் "கலர்ஸ் ஒப் ஸ்கொலர்ஸ்" ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை - 2020 இல் சித்தியடைந்த மாணவர்களை கெளரவக்கும் நிகழ்வு லீ மெரிடியன் மண்டபதில் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டார். இதில் கெளரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவேனந்திரன், கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், கணக்காளர் வை. ஹாபிவுல்லாஹ், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.என். அப்துல் மலீக், அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைஷால் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விமான்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், மாணவர்களுக்கு மொழிக் கல்வி சிங்களம், ஆங்கிலம் முறையாக கற்றுக் கொடுப்பது அவசியமாகும். இதனை எல்லோரும் பேசுகின்றனர். ஆனால் என் போன்றவர்கள் அனுபவ ரீதியாக உணர்ந்து பேசுகின்றோம். மொழிக் கல்வியினால் கல்வியில் உச்சம் தொடும் அளவுக்கு எங்களை மொழிக் கல்வி உயர்த்தியுள்ளது. மாணவர்களை ஆளுமையுள்ள, ஒழுக்க விழுமியங்களை பேணக்கூடிய, தலைமைத்துவ பண்புகளை வளர்க்கக் கூடிய செயற்படுகளில் ஈடுபடுத்த வேண்டும். மாணவர்களின் இன்றைய நிகழ்ச்சிகள் எங்களது கடந்த கால பாடசாலை காலங்களுக்கு கொண்டு சென்றது என்றும் தெரிவித்தார்.

மேலும் நிகழ்வில் அல்ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல். நஸாரினால் Hilal Crescent விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரின் முதற் பிரதி அதிபரினால் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு வழங்கி வைத்ததுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2020இல் கல்முனை வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும், அம்பாறை மாவட்ட மட்டத்தில், இரண்டாம் இடத்தையும் பெற்ற ஹனா இப்பத் (190 புள்ளி) பெற்ற மாணவிக்கு உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் நினைவு சின்னம் வழங்கி கெளரவித்தார்.

இதைத் தொடர்ந்து முதற் தடவையாக புலமைப்பரிசில் மாணவர்கள் தங்களுக்கு கற்றுத்தந்த ஆசான்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர். புலமைப்பரிசில் பரீட்சை 2020இல் சித்தியடைந்த 44 மாணவ, மாணவிகளுக்கு நிகழ்வின் அதிதிகளால் நினைவுச் சின்னம், பதக்கம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :