ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு நானும் ஆங்கிலப் பாடநெறியைத் தொடரச் செல்கின்றேன். அந்த நேரம் கறுப்பு அபாயா & பர்தா தான் dress code. Registration கு போனதுமே "இது தான் என் dress code என்னால் இதை மாற்ற முடியாது.. இங்கு ஆடையில் ஏதும் மறுப்பு இருக்கிறதா?" என்று தான் கேட்ட முதல் கேள்வியே. அவர்கள் சொன்னார்கள் இதற்கு முதல் ஒன்பது மாணவிகள் கற்கை நெறியைத் தொடராமல் கைவிட்டுச் சன்றதன் பின் எமது நிர்வாகம் அதைப் பற்றி ஆலோசனை செய்தோம். இந்நாட்டில் பிறந்த அனைத்து மாணவர்களுக்கும் இன,மத பேதமின்றி இலவசக் கல்வியை கற்கும் உரிமை இருக்கிறது.. இந்த ஆடைப் பிரச்சினையால் முஸ்லிம் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஆடைப் பிரச்சினையால் அம்மாணவர்களுக்கு கல்வி கற்கும் உரிமை இழக்கப்படுவது கவலைக்குரிய விடயம். எமது நிர்வாகம் உமது கலாசார ஆடைக்கு இவ்வருடத்திலிருந்து அனுமதியளித்திருக்கிறது. எனவே dress code colourகு Scarf மட்டும் போட்டு வாங்கன்னு சென்னாங்க. ஒரு கூட்டத்தின் போராட்டத்தின் விளைவு எதிர்கால மாணவர்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்தது.
After A/L Colombo Delmon hospital கு வேலை வாய்ப்பிற்காகச் சென்றேன். Interview Pass So 2mrw வந்து work join பன்னுங்க என்டாங்க but dress Code Saree தான் என்று Strictly சொல்லிட்டாங்க. எவ்ளவோ பேசிப் பார்த்தேன். முஸ்லிம் நிர்வாகமே புறக்கணித்தது. எனக்கு இந்த job வேணாமன்னு விட்டு வந்துட்டேன்.
அதனைத் தொடர்ந்து ATI இல் HNDE செய்தேன். அறுபதிற்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்களில் இரண்டே இரண்டு முஸ்லிம் மாணவிகள். Raging Seasonல கூட நம்ம dress codeகு Seniors ஒரு வார்த்தையிலேனும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அங்க வந்த பிரச்சினை என்னன்னா Seniors & Super Seniors என்னை Junior Batchல Union Leader a நியமிச்சிடாங்க. அப்பரம் அடிக்கடி Pickets, Union meeting என்டெல்லாம் நிறையவே நடந்திச்சி.. முஸ்லிம் மாணவிகள் பத்து பேர் கூட இருக்கல bt ஒரு முஸ்லிம் Lecturer இருந்தார். அதனால் எமக்கு பயன்படுத்தப்படாத ஒரு வகுப்பறைல தொழுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனைத் பார்த்துக் கொண்டிருந்த மாற்று மத மாணவர்கள் அவர்களுக்கும் வணங்க புத்தர் சிலையொன்று கட்டாயம் அவ்விடத்தில் அமைத்துத் தரனுமன்னு போராடவும், முஸ்லிம் மாணவர்களுக்கு பிரிவினை காட்டவும் ஆரம்பித்தார்கள்..
இப்பிரச்சினை பற்றி Union meeting இல் பேசினேன். அவர்கள் புத்தர் சிலை அமைப்பதற்கு முஸ்லிம் மாணவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நாம் நமக்காக எதையும் கேட்கவில்லை.. பிறிவினை காட்டாமல் நிம்மதியாக படிக்க விட்டால் போதுமென்றேன். அந்த meetingகு தலைமை தாங்குவதற்கு கொழும்புப் பல்கழைக்கழக சிரேஷ்ட மாணவர் ஒருவர் வந்திருந்தார். அவர் என்ன சொன்னாறென்றால், "எமது தாய், தந்தை சிறு வயதிலிருந்தே முஸ்லிம்களை எமது எதிரிகள் என்று சொல்லித் தந்து தான் வளர்த்தார்கள். சிறு வயதிலிருந்தே முஸ்லிம்கள் என்றால் அவ்வளவு வெறுப்பு.. University, ATI வந்த பிறகு தான் முஸ்லிம்கள் கூட பழகவே ஆரம்பிக்கிறோம். இதனால் தான் அவர்களும் இப்படி பிரிவினை காட்டியிருப்பார்கள். அவர்களது கருத்துக்கள செயற்படுத்த நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். இது மதம் சார்ந்த நிறுவனமல்ல என்பதை நாம் அவர்களுக்கு புரிய வைக்கின்றோமென எமக்கு ஆறுதலாக இருந்தார்கள். அவர்களிடம் மனிதநேயத்தைப் பார்த்தேன்..
Appointment கிடைத்து முதல் நாள் Office போக பயபட்றேன். தென் மாகாணத்தில் தமிழ் மொழியில் கல்வி கற்றாலும் அலுவலகங்களில் சிங்கள மொழியில் தான் தொழில் புரிய நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.. நிறைய சவால்களைத் தாண்டித் தான் ஒரு நிலைக்கு வர முடிகிறது. தந்தையின் மாற்று மத சகோதர நண்பர்கள் இரவோட இரவாக வீட்டிற்கு வந்து தைரியப்படுத்தினார்கள். தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் call பன்னி பார்த்துக்க சொன்னாங்க. அந்த Officeல இது வரைக்கும் முஸ்லிம் ஒர்த்தர் Work பன்னதே இல்ல. 80பேருக்கு மேல் வேலை செய்கிற அலுவலகத்தில் நான் மட்டுமே முஸ்லிம். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின் தான் நியமனம் கிடைத்தது. இனவாதம் தலை தூக்குமோ, பிரிவினை காட்டுவார்களா, ஆடை பிரச்சினையாக அமையுமோ எனறெல்லாம் பயத்துடன் தான் சென்றேன். தனது சொந்த சகோதரர்களைப் போல் நடத்தினார்கள். எனக்கொரு பிரச்சினன்னா முழு staff உமே ஆறுதலாக இருப்பாங்க. அங்கு மனித நேயம் தான் மிகைத்திருந்தது..
சகவாழ்வு என்பது நத்தார் மரத்தில் தர்மச்சக்கரத்தை தொங்க விட்டு, சிவனின் சிலையில் சிலுவையை வரைவதல்ல.. பள்ளிவாசலில் பிரித் ஓதி விகாரையில் இப்தார் கொண்டாடுவதுமல்ல..
சகவாழ்வு என்பது தனது கலாசாரத்தை நேசிப்பதோடு பிற கலாசாரங்கைளயும் மதித்து நேசிக்க கற்றுக் கொள்வதாகும். ஒவ்வொரு கலாசாரத்திற்குமென்று தனித்துவமான அடையாளங்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டு புரிந்து கொள்வதாதாகும்.
தமது மத கலாசாரங்களை பிறமதத்தவர்கள் மேல் திணிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. இந்துப் பாடசாலைக்கு இந்து கலாசார ஆடையில் தான் வர வேண்டுமென்று திணிக்கப்படுவது இந்து மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்துவதற்குச் சமன். முஸ்லிம் பாடசாலைக்கு வரும் இந்து மற்றும் சிங்கள ஆசிரியர்கள் இஸ்லாமிய ஆடையில் தான் வரனுமன்னு வற்புறுத்தப்பட்டிருந்தால் இன்னேரம் இலங்கையில் போராட்டமே வெடித்திருக்கும்.
சிங்களப் பாடசாலைகளில் சமயப்பாடம் நடத்தும் மதகுருமார்கள் அவர்களது சிருரை ஆடை அணிந்து கொண்டு தான் செல்கிறார்கள். சிங்களப் பாடசாலையில் கற்கும் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய ஆடை அணிந்து கொண்டு தான் செல்கிறார்கள். இலங்கை அரசாங்கம் 2019.06.26 வெளியிட்ட சுற்று நிரூபம் 13/2019(1) இன் மூலம் அரச ஊழியர்களுக்கு கௌரவத்தைப் பாதுகாக்கும் கண்ணியமான ஒரு ஆடை அணிய முடியுமென்று அனுமதியளித்திருக்க அந்த அம்மணி சட்டத்தை கையிலெடுத்து ஆடும் சர்வதிகார ஆட்டத்தை என்னவென்று சொல்வது? மனித நேயம் நீங்கள் படித்த PhD மேற்படிப்பிலிருக்காது, இன மத பேதமின்றி மனிதனை மனிதனாய் நடத்துவதில் இருக்கிறது. தகுதியில்லாத இனவாதிகளை கதிரையில் அமர்த்தினால் படிப்பிச் சொல்லிக் கொடுப்ததற்கு பதிலாக, மாணவர்களுக்கு வேற்றுமை தகர்த்து நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் போதிப்பதற்கு பதிலாத இவ்வாறு சாதி,மத வெறி கொண்டு நஞ்சூட்டும்.. இனவாதத்தை கற்றுக் கொடுக்கும். அந்த சர்வதிகாரி பெரும் ஒரு அரசியல் பின்புலத்தின் கைபொம்மையாய் இயங்குகிறது என்று மட்டும் தெட்டத் தெளிவாக புரிகிறது..
முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவெனில், இது போன்ற சில விஷமிகள் நம் சமூகத்திலும் மறைகரமாகச் செயற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். சில முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்க வருகின்ற இந்து மற்றும் கிறிஸ்தவ மாணவிகளும் இஸ்லாமிய ஆடை அணிந்து வர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தென் மாகாணத்தில் ஒரு தேசிய பாடசாலையில் பெண்கள் Face cover பன்னுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அப்பாடசாலைக்கு வரும் இந்து மற்றும் கிறிஸ்தவ மாணவிகள் முஸ்லிம் மாணவிகளைப் போன்று பர்தா அணிந்து முகத்தை மறைத்துத் தான் வரனுமென்று திணிக்கப்பட்டிருந்தது. படிப்பிற்காக விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் மேல் திணிக்கப்பட்ட பிற கலாசார ஆடை உங்களைப் போல் அவர்களையும் தான் நிறையவே பாதித்து இருக்கும். அவரவர் மதத்தை, கலாசாரத்தை பின்பற்றும் உரிமையை வழங்க வேண்டும். நமது கலாசாரத்தை பிற மதத்தவர் மீது திணிப்பது எவ்வகையிலும் நீதியாகாது.. உங்களுக்கு வலிப்பதைப் போன்று தான் அவர்களுக்கும் வலிக்கும்..
எமது சமுகத்திற்கு ஏதாச்சும் பிரச்சினன்னா குனூத்துடன் எல்லாம் முடிந்திடும். உரிமைகள் வழங்கப்பட்டாலும் மறுக்கப்பட்டாலும் எதையும் ஏற்றுக் கொள்ளும் இதயம் அவர்களது.. இந்த பிரச்சினையில் அவ்வாசிரியருக்கு ஏசி ஒரு கூட்டம், ஹுதைபியா உடன்படிக்கையை எடுத்துக் காட்டி விட்டுக் கொடுக்கச் சொல்லும் தியாகிகள் ஒரு கூட்டம். வாய் மூடி இருக்கும் சமூகத்திற்கு போராட்ட குணம் இல்லவே இல்லை. அடுத்த சமூகத்தை கொஞ்சம் திரும்பித் தான் பாருங்களேன், அவர்களுக்குத் தெரியும் போராடாமல் எதுவும் கிடைக்காதென்று. போராட்டமே அவர்களது ஆயுதம். நமது சமுகம் ஒன்றாக இணைந்து போராடுவது எப்படிப் போனாலும் அடுத்தவர் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறது.. உண்மையில் வெட்கப்பட வேண்டும்.. நாளைக்கு எல்லோருக்கும் இதே நிலை தான் வரப் போகிறது, கடைசியில் இஸ்லாமிய ஆடை அணியும் உரிமையை முற்றாக இழந்து பிற கலாசார ஆடையை அணிய நிர்ப்பந்திக்கப்படத் தான் போகிறோமென்பதில் சந்தேகமே இல்லை.
சில சிங்களப் பாடசாலைக்குச் செல்லும்
முஸ்லிம் மாணவிகள் இன்றே சிங்கள மாணவிகளைப் போன்று தான் ஆடை அணிகிறார்கள், அந்தப் பாடசாலையில் இஸ்லாமிய ஆடைக்கு அனுமதி இல்லை என்பதால்.. இஸ்லாமிய ஆடை அணிய அனுமதி இல்லாத பாடசாலைக்கு விரும்பியே செல்லும் போது இது ஒன்னும் நமக்கு பெரிய விஷயம் இல்லையே.. படிப்பிற்காக இதெல்லாம் பாவமில்ல So நாட்டு சட்டத்தை மதித்து அந்நிய கலாசார ஆடையை அணிந்து செல்லும் ஒரு நாள் வெகு தூரமில்லை..
வாழ்த்துக்கள்
..!!!
#HIJAB is my RIGHT


2022/02/05
0 comments :
Post a Comment